பட்டுபோன்ற மென்மையான கூந்தலுக்கு இந்த 2 பொருட்கள் போதும்: இப்படி Use பண்ணுங்க
உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் பட்டு போன்ற மென்மையான கூந்தலை பெற பெரிதளவில் உதவுகின்றது.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருட்களை இப்படி பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
- கற்றாழை ஜெல்
தயாரிக்கும் முறை
முதலில் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பின் இயற்கையான கற்றாழை ஜெல்லை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் நன்றாக கலக்கவும்.
நன்றாக கலந்த பிறகு 3 நிமிடம் அப்படியே வைத்து பின் முடியில் தடவ வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியைக் கழுவி ஷாம்பு பயன்படுத்தலாம்.
இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் தலைமுடிபளபளப்பாகத் தொடங்கும்.
கிடைக்கும் நன்மைகள்
கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-பி ஆகியவை முடிக்கு ஏராளமான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் முடியை அனைத்து வகையான தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
தேங்காய் எண்ணெய்யில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு உறுப்பு, பொடுகு பிரச்சனையிலிருந்து முடியை பாதுகாக்கிறது.
தேங்காய் எண்ணெய் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் முடியை ஈரப்பதமாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், தேங்காய் எண்ணெய் முடியின் பொலிவை பராமரிக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |