இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பானம்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒரு நாள்பட்ட நிலை.
கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதைச் சரியாகப் பயன்படுத்தாதபோது இது ஏற்படுகிறது.
உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
அந்தவகையில், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சோம்பு- 1 ஸ்பூன்
- பிரியாணி இலை- 1
- பட்டை- சிறிய துண்டு
- செம்பருத்திப் பூ- 2
- தண்ணீர் - 2 கப்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அத்துடன் சோம்பு, பிரியாணி இலை, பட்டையை சேர்க்க வேண்டும்.
பின் அதில் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிக்கும் போது தண்ணீர் பாதி அளவாக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் குடிக்க வேண்டும்.

இதை வாரத்திற்கு 2 நாட்கள் குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறையும்.
இந்த பானத்தை குடித்து வரும் போது, ஒவ்வொரு முறை குடித்த பின்னரும் இரத்த சர்க்கரையை பரிசோதனை செய்ய வேண்டும்.
சர்க்கரை நன்கு குறைதவுடன், இதை குடிப்பதை நிறுத்திவிட வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |