முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- எலுமிச்சை- 1
- உப்பு- சிறிதளவு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் முகத்தை நீரில் கழுவி துடைத்துவிட்டு, பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- நாட்டுச்சர்க்கரை- 1 ஸ்பூன்
- வெள்ளரிக்காய் சாறு- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரையை எடுத்து, வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |