இடுப்பு கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை சாறு.., எப்படி தயாரிப்பது?
உடலில் தேவையற்ற கொழுப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிப்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
அந்தவகையில், உடல் எடையை குறைக்க உதவும் இந்த ஆரோக்கியம் நிறைந்த இந்த சாறை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை- 1
- மஞ்சள்- 1 சிட்டிகை
- தேன்- ½ ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் எலுமிச்சையில் முழுவதுமாக சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை கலக்கவும்.
அடுத்து இந்த பானத்தில் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த ஆரோக்கியமான இயற்கை பானத்தை 30 நாட்களுக்கு தினமும் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இந்த சாறை வெறும் வயிற்றில் நீங்கள் குடிக்கும்போது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் படிப்படியாக கரைய தொடங்கும்.
மேலும், செரிமான அமைப்பை மேம்படுத்தி சருமத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி முகத்தை பொலிவு படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |