பொலிவற்ற முகத்தை பளபளப்பாக மாற்ற உதவும் பேஸ்பேக்: எப்படி தயாரிப்பது?
சூரிய கதிர்கள் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து கருப்பாக மாறுகின்றன.
அந்தவகையில், பொலிவற்ற முகத்தை பளபளப்பாக மாற்ற உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- தேன்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை- 1
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்குவதோடு, முகம் பளிச்சென்று இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |