வெள்ளைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கும் இயற்கை டை.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை டையை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் பொடி - 1 கப்
- கருஞ்சீரக பொடி - 2 ஸ்பூன்
- தேயிலை இலை நீர் - 2 கப்
- மருதாணி போடி- 1 கப்
- சீகைக்காய் பொடி - 3 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் நெல்லிக்காய் பொடி மற்றும் கருஞ்சீரக பொடியைப் சேர்த்து வறுக்கவும்.
அவற்றை வறுத்த பிறகு, அதில் தேயிலை இலை தண்ணீரைச் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட்டைத் தயாரிக்கவும்.
பின் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை கீழே இறக்கி வைக்கவும்.
இதற்குப் பிறகு, மருதாணிப் பொடி மற்றும் சீகைக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து அனைத்தையும் சுமார் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இதற்கடுத்து இதை உங்கள் தலைமுடியின் வேர்களில் இருந்து நுனி வரை தடவி 1 மணி நேரம் உலர விடவும்.
பின் தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும், இவ்வாறு வாரத்திற்கு 1 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வெள்ளைமுடி கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |