தொங்கும் தொப்பையை குறைக்க இந்த ஒரு பொடி போதும்.., தண்ணீரில் கலந்து குடிக்கலாம்
பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
உடல் எடையை அதிகரிக்க அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், இந்த பொடியை தினமும் தண்ணீரில் கலந்து குடித்து வர தொப்பை நிரந்தரமாக குறையும்.
தேவையான பொருட்கள்
- ஆளி விதை- 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு வானலை அடுப்பில் வைத்து ஆளி விதைகளை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் பட்டை, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து அனைத்தையும் நன்கு ஆறவைக்க வேண்டும்.
பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த பொடியை 1 ஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.

இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
இந்த பொடியை உட்கொள்வதன் மூலம், உடல் பருமன் மற்றும் தொப்பை குறைவது மட்டுமின்றி பல பலன்கள் கிடைக்கும்.
அதாவது இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் பராமரிக்கப்படும், உடலினுள் அழற்சி குறையும் , இதய ஆரோக்கியம் மேம்படும்.
மேலும் உடலின் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்படும், செரிமானம் மேம்படும் மற்றும் பசியுணர்வு கட்டுப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |