மஞ்சளையும் தேனையும் இப்படி கலந்து சாப்பிட்டு பாருங்க! எப்பேர்பட்ட காய்ச்சலும் ஓடி விடுமாம்
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படும் மஞ்சள் பல அற்புதமான மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.
இதனால் பல நூற்றாண்டுகளாக மக்கள் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இது பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
உடல் நலம், மருத்துவம், அறிவியல், ஆரோக்கியம் என எல்லாவற்றிலுமே மஞ்சளுக்கு என்ற தனி இடம் இருக்கிறது.
எண்ணற்ற மருத்துவகுணங்களை கொண்ட இந்த மஞ்சளை தேனுடன் கலந்து சாப்பிடுவது நன்மையே தரும். குறிப்பாக காய்ச்சலை விரட்ட உதவுகின்றது.
அந்தவகையில் காய்ச்சலை விரட்ட மஞ்சளையும் தேனையும் எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மஞ்சள் - மூன்று தேக்கரண்டி
- தேன் - 100 கிராம்
செய்முறை
- ஒரு பௌலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் தேன் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவை காய்ச்சலுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
- ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அரை ஸ்பூன் வீதம் இந்த மருந்தை சாப்பிடலாம்.
- அதேபோல இந்த மருந்தை வாயில் வைத்ததும் உடனே விழுங்கி விடாமல் மெதுவாக நாவால் சுவைத்து மெதுவாக சாப்பிட வேண்டும்.
- அடுத்த நாள் அதே அளவு மருந்தை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்குஒரு முறை எனக் கொடுக்க வேண்டும்.
- மூன்றாவது நாளில் தினமும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை என கொடுக்க வேண்டும். இந்த கலவையை உங்கள் தேநீர் அல்லது பாலில் சேர்த்தும் கொடுக்கலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.