வங்காளதேச பந்துவீச்சை அடித்துநொறுக்கிய கேப்டன்! கடைசி ஓவரில் பௌல் சரவெடி ஆட்டம்
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 155 ஓட்டங்கள் எடுத்தது.
ஷாய் ஹோப்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சாட்டோக்ராமில் நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. அலிக் அதனசி, பிரண்டன் கிங் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 59 ஓட்டங்கள் குவித்தது. 34 (27) ஓட்டங்கள் எடுத்திருந்த அலிக் அதனசி (Alick Athanaze) 9வது ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்து பிரண்டன் கிங் (Brandon King) 33 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தஸ்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பௌல் ருத்ர தாண்டவம்
ஷெர்பானே ரூதர்போர்டு முதல் பந்திலேயே டக்அவுட் ஆக, அணித்தலைவர் ஷாய் ஹோப் (Shai Hope) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
மறுமுனையில் ரோவ்மன் பௌல் கடைசி ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் கடைசி மூன்று ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் 51 ஓட்டங்கள் குவிக்க, வங்காளதேச அணிக்கு 166 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.
ஷாய் ஹோப் 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 46 ஓட்டங்களும், பௌல் 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 44 ஓட்டங்களும் விளாசினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |