சீனா, ரஷ்யா வேண்டாம்... ஹார்முஸ் நீரிணையைத் திறக்க புதிய அணி திரட்டும் அமெரிக்கா
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்காக, ஒரு புதிய சர்வதேச அணியை அமைக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பு
இதன்பொருட்டு, MFC எனப்படும் இந்த கடல்சார் சுதந்திரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறையின் கூட்டு முயற்சியாகவே இது முன்னெடுக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில், மத்திய கிழக்கிற்கான மோதலுக்குப் பிந்தைய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவதில், கடல்சார் பாதுகாப்பு மன்றம் (MFC) ஒரு முக்கியமான முதல் படியாக அமைகிறது என கசிந்துள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், முக்கிய கடல்சார் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும், இன்றியமையாத கடல்வழிப் பாதைகளில் வழிசெலுத்தல் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பேணுவதற்கும் இந்தக் கட்டமைப்பு இன்றியமையாதது எனவும் கூறப்பட்டுள்ளது.
இப்படியான தகவல் முதலில் புதன்கிழமையன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்கத் தூதரகங்கள், மே 1-ஆம் திகதிக்குள் நேச நாடுகளிடம் இந்தத் தூதுக்குறிப்பை வாய்மொழியாகத் தெரிவிக்க வேண்டும்; ஆனால் ரஷ்யா, சீனா, பெலாரஸ், கியூபா மற்றும் அமெரிக்காவின் பிற எதிரி நாடுகளிடம் இதனைத் தெரிவிக்கக்கூடாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் நாடுகள், ராஜதந்திரம், தகவல் பகிர்வு, அமலாக்கம், கடற்படைப் பிரசன்னம் அல்லது பிற வகையான ஆதரவு வடிவங்களில் உதவலாம். மட்டுமின்றி, அனைத்து மட்டங்களிலான ஈடுபாட்டையும் வரவேற்கப்படுகிறது; மேலும், தற்போதுள்ள பிராந்திய கடல்சார் கட்டமைப்புகள் மற்றும் அமைப்புகளிலிருந்து பங்கேற்கும் நாடு தனது கடற்படையை அனுப்பத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மீது முற்றுகை
இந்த MFC என்பது ஜனாதிபதி ட்ரம்பின் அதிகபட்ச அழுத்த நடவடிக்கையிலிருந்தும், நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளிலிருந்தும் வேறுபட்டதாகும்.
பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், போர்ச்சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்திற்கு காப்பீடு அளிக்க நிறுவனங்கள் முன்வரவில்லை.
அத்துடன், அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்ற ஈரானின் அறிவிப்பும் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது.

இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக தொடங்கப்பட்ட இந்த போரில் இருந்து விடுபட அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருவதுடன், ஈரானுக்கு அழுத்தமளிக்கும் வகையில் தற்போது துறைமுகங்கள் மீது முற்றுகையும் நடத்தியுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்பட ஈரான் மறுப்பு தெரிவித்து வருவதுடன், ரஷ்யா மற்றும் சீனாவின் உதவியையும் நாடியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |