அடுத்த இலக்கு 140 டொலர்... மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப்

Donald Trump Iran Crude Oil
By Arbin Apr 30, 2026 04:28 AM GMT
Report

ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியைக் குறிவைத்து ஹார்முஸ் நீரிணையில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கடற்படை முற்றுகையை ஈரான் கேலி செய்துள்ளது.

எதுவும் வெடிக்கவில்லை

ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்காவின் உத்திகள் தோல்வி கண்டுள்ளதையே ஈரான் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தமது சமூக ஊடகப் பக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்தையும் கேலி செய்துள்ளார்.

அடுத்த இலக்கு 140 டொலர்... மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப் | Iran Speaker Ghalibaf Big Warning

அதில், இதுவரை ஈரானின் எண்ணெய் கிணறுகள் எதுவும் வெடிக்கவில்லை என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 26 ஆம் திகதி தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்,

இன்னும் மூன்று நாட்களில் ஈரானின் எண்ணெய் கிணறுகள் மிக சக்திவாய்ந்த பேரழிவுச் செயல்முறையில் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் ட்ரம்ப் குறிப்பிட்ட அந்த மூன்று நாட்கள் கடந்த பின்னர், வணிகக் கப்பல் போக்குவரத்தின் மீதான கடல்வழி முற்றுகை, ஈரானின் எண்ணெய் உற்பத்தியை உடனடியாக முடக்கிவிடும் என எதிரிகள் கனவு கண்டார்கள் என காலிபாஃப் கேலி செய்துள்ளார்.

எண்ணெய் சந்தைக்கு அடுத்த அதிர்ச்சி... OPEC கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஐக்கிய அரபு அமீரகம்

எண்ணெய் சந்தைக்கு அடுத்த அதிர்ச்சி... OPEC கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஐக்கிய அரபு அமீரகம்

மூன்று நாட்கள், எதுவும் வெடிக்கவில்லை, வேண்டுமென்றால் அதை 30 நாட்களாக நீட்டித்து நேரலை செய்யலாம் என்றார். மேலும், ஈரான் மீது தற்போது பொருளாதார அழுத்தம் என்ற உத்தியை முன்னெடுத்ததற்கு, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் போன்ற அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளின் பயனற்ற ஆலோசனைகளே காரணம் எனவும் காலிபாஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த இலக்கு 140 டொலர்... மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப் | Iran Speaker Ghalibaf Big Warning

140 டொலரை எட்டும்

அத்துடன், தற்போது 120 டொலரை எட்டவிருக்கும் எண்ணெய் விலை, அடுத்து 140 டொலரை எட்டும் என்பது உறுதி எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) முன்னாள் விமானப்படைத் தளபதியாகவும், 2005 முதல் 2017 வரையில் தெஹ்ரானின் மேயராகவும் பதவி வகித்த காலிபாஃப், பொறியியல் பின்னணியைக் கொண்டவர்; மேலும் ஈரானின் பாதுகாப்பு அமைப்பில் ஆழமான வேர்களைக் கொண்ட, ஒரு நடைமுறைவாதியான தீவிரப்போக்காளராகவும் இவர் நற்பெயர் பெற்றுள்ளார்.

மத்திய கிழக்கு பாதுகாப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுடனான ஈரானின் பேச்சுவார்த்தைகளை அவர் வழிநடத்தி வருகிறார்.

அடுத்த இலக்கு 140 டொலர்... மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப் | Iran Speaker Ghalibaf Big Warning

ஈரானின் எண்ணெயை அந்நாட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கும் நோக்கில், ஈரானின் கடல்வழி வர்த்தகத்தின் மீது முற்றுகையிட அமெரிக்க இராணுவத்திற்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

உற்பத்தியைக் குறைத்து வருவாய் இழப்பைச் சந்திப்பதா அல்லது குழாய்கள் மற்றும் தேக்கங்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் அதீத அழுத்தத்தால் உள்கட்டமைப்பு சேதமடைவதா என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு ஈரானை இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்தும் என அமெரிக்கா நம்புகிறது.

ஆனால் இந்த முற்றுகையானது, ஈரானின் வருவாய் மற்றும் அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரத்தைப் பாதித்துள்ளது என்பதுடன் எண்ணெய் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US