விமான டயருக்குள் சிக்கி நசுங்கிய உடல்! தாலிபான்களிடம் தப்பிக்க நினைத்து உயிரிழந்த சோகம்: வெளியான அதிர்ச்சி வீடியோ
காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ஜெட் விமானத்தின் டயரில் மனித எச்சம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி மீண்டும் வந்துவிட்டதால், அங்கிருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, நாட்டின் முக்கிய நகரமான காபூலில் இருக்கும் சர்வதேச விமானநிலையத்தில் குவிந்தனர்.
இதனால் விமானநிலையம் முழுவதும் ஒரு பரபரப்பாகவே காணப்பட்டது. கண்ணில் தெரிந்த விமானங்களில் எல்லாம் ஆப்கான் மக்கள் ஏற முயற்சித்தனர்.
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் தூதரக குடும்பத்தினரை மீட்டு வர இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தனர்.
ஆனால், அதிலும் ஒரு சில ஆப்கான் மக்கள் ஏறி சென்றனர். அவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை காபூலில் இருந்து புறப்பட்ட C-17 ஜெட்விமானம் தரையிறங்கிய போது, அந்த விமானத்தின் டயரில் உடல் நசுங்கிய நிலையில், காணப்பட்ட திடுக்கிடும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் விமானம் நடுவானில் பறக்கும் போது, விமானத்தின் வலது புற டயரில் மனிதனின் கால் பாகங்கள் மட்டும் காற்றில் பறப்பதையும், தரையிரங்கும் போது, அப்படி சிதறுவதையும் பார்க்க முடிகிறது.
இதை அமெரிக்க அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். விமானம் தரையிரக்கப்பட்ட போது, அந்த விமானத்தின் டயரில் மனித உடலின் எச்சங்கள் இருந்ததாகவும், இருப்பினும் அவசர நிலைமை காரணமாக, அந்த விமானம் மூன்றாவது நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்
ஆனால், அந்த விமானத்தின் டயருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த நபர் யார் என்பது தெரியவில்லை. அதே சமயம் காபூலில் இருந்து புறப்ப அமெரிக்க விமானத்தில், மூன்று பேர் மேலே இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.