குதிரைப் பால் விற்பனை திருச்சியில் அமோகம்: 1 லிட்டர் பாலின் விலை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் குதிரை பால் விற்பனை அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
வங்கி வேலையை துறந்த இளைஞர்
தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்த வாடிப்பட்டியில் இளைஞர் ஒருவர் குதிரைப் பால் விற்பனையை தொடங்கியுள்ளார்.
வங்கிப் பணியாளரான பாலசுப்பிரமணியன் நாட்டுக்குதிரை இனங்களை மீட்டெடுப்பது குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
Sun News
உலகளவில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த மெஸ்ஸியின் இண்டர் மியாமி: இந்திய கிரிக்கெட் அணி பிடித்துள்ள இடம்?
அத்துடன் தற்போது தன்னுடைய வங்கி பணியை துறந்துவிட்டு முழுநேரமும் தன்னை குதிரை வளர்ப்பில் ஈடுபடுத்தி வருகிறார். மேலும் குதிரை சவாரி பயிற்சி அகாடமியையும் திறந்து நடத்தி வருகிறார்.
குதிரைப் பால் விற்பனை
இந்நிலையில் குதிரைப் பால் உடல் நலத்திற்கு நலம் தரக்கூடியது என்பதை உணர்ந்த பாலசுப்பிரமணியன் தேசிய குதிரைகள் தினமான டிசம்பர் 13ம் திகதி குதிரை பால் விற்பனையை தொடங்கியுள்ளார்.
நல்ல சத்துள்ள குதிரை ஒருநாளுக்கு 1லிட்டர் பால் மட்டுமே தரும் என்பதால், 1 லிட்டர் குதிரை பாலின் விலை 2,500 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளார்.
பாலசுப்பிரமணியம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் 100மி.லி முதல் 200 மி.லி என்ற அளவில் விற்பனை செய்து வருகிறார்.
விற்பனையின் தொடக்க கட்டத்தில் சோதனை முறையில் குதிரைப் பாலை வாங்கி சென்ற மக்கள் தற்போது அதன் சுவை பிடித்து போய் வழக்கமாக வாங்கி வருவதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Trichy, Horse Milk, Horse Milk sales, Balasubramanian, Bank employee