பைபாஸ் இதய அறுவை சிகிச்சையின்போது தீப்பிடித்த மருத்துவமனை... உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்களும் செவிலியரும் செய்த வீரதீரச் செயல்
ரஷ்யாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஆபத்தான பைபாஸ் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துகொண்டிருந்தது. மருத்துவர்கள் நோயாளியின் மார்பை வெட்டித் திறந்த நேரத்தில், திடீரென அந்த மருத்துவமனையில் தீப்பிடித்தது.
பாதுகாப்பு கருதி மருத்துவமனையிலிருந்த அனைவரும் உடனடியாக வெளியேற வலியுறுத்தப்பட்டபோது, அந்த அறுவை சிகிச்சையை தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்த தலைமை மருத்துவரான Valentin Filatov (29) வெளியேற மருத்துவிட்டார்.
அவரது சக மருத்துவ உதவியாளர்கள் விசிறிகள் உதவியுடன் புகையை வெளியேற்ற, தளராமல் Valentinம் அவரது குழுவினரும் உயிரைப் பணயம் வைத்து, அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து நிறைவேற்றினார்கள்.
எங்களுக்கு பயமாகத்தான் இருந்தது, நாங்களும் மனிதர்கள்தானே என்று கூறும் Valentin, என்றாலும் நாங்கள் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்தோம், அது ஒரு ஆபத்தான பைபாஸ் அறுவை சிகிச்சை, வேறு என்ன செய்திருக்கமுடியும் சொல்லுங்கள் என்கிறார்.
அறுவை சிகிச்சைக்குப்பின், அந்த நோயாளி உடனடியாக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
Valentinக்கும், அவரது சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.
அதிர்ஷ்டவசமாக, அந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சியான தகவல்.


