பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் திருட்டு! மருத்துவர்கள் மீது நோயாளிகளின் குடும்பத்தினர் பரபரப்பு புகார்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல மருத்துவமனைகள், தங்கள் வளாகத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் ஊசிகள் திருடப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனைகள் திணறி வருகின்றனர்.
பல மாநிலங்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வெளியே காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் சிகிச்சை பொறாமல் பலர் உயரிழந்துள்ளது அதிர வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள், ஆக்சிஜன் விநியோகம் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளன.
இவ்வாறான சூழலில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பல மருத்துவமனைகள், தங்களிடமிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் ஊசிகள் திருடப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளன.
[96WJGG ]
அதேசமயம், மருத்துவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு முதலில் ஊசி போடுவதாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டள்ள நோயாளிகளின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
12 பேர் மீது மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. ரெம்டெசிவிர் விநியோகம் செய்த இரண்டு மருத்துவர்கள் மாற்றப்பட்டுள்ளனர், மேலும் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.