கேக் வெட்டியதற்காக பெண்ணிடம் ரூ 10,656 கட்டணம் வசூலித்த உணவகம்: இணையத்தில் வெடித்த சர்ச்சை
ஹோட்டலில் கேக் வெட்டியதற்காக இளம் ஒருவரிடம் ரூ.10,656 கட்டணமாக வசூலிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேக் வெட்டியதற்கு தனி கட்டணம்
அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள பொஸ்ஸா என்ற ஆடம்பர உணவகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கேக் வெட்ட வந்தவர்களிடம் ஹோட்டல் நிர்வாகம் கிட்டத்தட்ட 110 அமெரிக்க டொலர்(இந்திய ரூபாய் மதிப்பில் 10,656) கட்டணமாக வசூலிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜஸ்டின் என்பவர், கேக் வெட்டியதற்காக ஹோட்டல் நிர்வாகம் வழங்கிய கட்டண ரசீதை புகைப்படமாக இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதையடுத்து அந்த பில்லின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் நெட்டிசன் ஒருவர், ஒரு நபருக்கு $10 டொலர் வசூலிப்பது என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட உணவகம் இன்ஸ்டாகிராமில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அத்துடன் சர்ச்சைக்கான உரிய விளக்கத்தையும் அளித்துள்ளது.
அதில், கேக் வெட்டுவதற்கு தனி கட்டணம் என்பதை வாடிக்கையாளருக்கு முன்னரே தெரிவிக்காதது தங்களின் தரத்திற்கு முரணானது என்பதால், இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு உரிய கட்டணத்தை திருப்பி கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இனி தங்கள் உணவகத்தில் கேக் வெட்டுவதற்கான கட்டணத்தை $10 இருந்து $5 ஆக குறைத்து இருப்பதாகவும் உணவகம் விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |