இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்! ரஷ்யாவில் பேசிய பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும் என்று பேசியுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறும் இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடி உரை
இந்நிலையில் ரஷ்ய வாழ் இந்தியர்கள் மத்தியில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், " ரஷ்ய வாழ் இந்தியர்கள் கொடுத்த அன்பான வரவேற்புக்கு நன்றி.
140 கோடி மக்களின் அன்பை இங்கு கொண்டு வந்திருக்கிறேன். இதைவிட 3 மடங்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுள்ளேன்.
இந்திய நாட்டை மூன்றாவது பொருளாதார நாடாக மாற்றுவது தான் என்னுடைய இலக்கு ஆகும். இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்.
நான் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாடாக இந்தியா உள்ளது. மாற்றத்தை நோக்கி இந்தியா செல்வதாக பலரும் கூறுகிறார்கள்.
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ளது. லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை படைத்துள்ளது.
கடந்த 10 வருடங்களில் 40,000 கி.மீ. ரயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |