பிரதமர் உட்பட ஹவுதிகளின் மொத்த அமைச்சரவையும் படுகொலை... இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு
ஏமனில் ஹவுதிகளின் மொத்த அமைச்சரவையும் இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், ஹவுதிகளின் பிரதமர் மற்றும் 12 அமைச்சர்களும் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இந்த சம்பவம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றே Channel 12 என்ற செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏமனின் Al-Jumhuriya மற்றும் Aden Al-Ghad உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலில்,
தலைநகர் சனாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அவரது அமைச்சரவை சகாக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிட்டுள்ளது. வெளியான இன்னொரு தகவலில், ஹவுதிகளின் மூத்த அமைச்சர்கள் 10 பேர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டம்
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவுதிகளின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் தாக்குதலில் சிக்கியுள்ளதாகவும், உறுதியான தகவலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு சற்று முன்பு இருவரும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகவும், தாக்குதல் நடத்தப்பட்டபோது அவர்கள் சம்பவ இடத்தில் இருந்திருக்கலாம் என்றும் Channel 12 தெரிவித்துள்ளது.
ஹவுதிகளின் பிரதமர் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தலைமைத் தளபதி இயல் ஜமீர் ஆகியோருடன் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் என மூவரும் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |