சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க உளவு விமானம்.. ஏமனில் அதிகரிக்கும் பதட்டம்!
ஏமன் வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
வுஹத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படை அமெரிக்க உளவு விமானத்தை கூட்டு வீழ்த்தியதாக போராளி குழுவின் செய்தித் தொடர்பாளர் Yahya Sare'e ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து Yahya Sare'e ட்விட்டரில் பதிவிட்டதாவது, வான் பாதுகாப்பு, ஒரு அமெரிக்க உளவு விமானத்தை (ஸ்கேன் ஈகிள்) தகுந்த ஆயுதத்தால் சுட்டு வீழ்த்தியது.
மாரிப் கவர்னரேட்டின் மத்கல் மாவட்டத்தின் வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது.
அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் இராணுவ ஊடகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2- The targeting is documented by the military media lens, and the footage of the plane wreckage will be broadcast later.
— Yahya Sare'e (@Yahya_Saree) August 14, 2021
மேலும் விமானத்தின் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் பின்னர் வெளியிடப்படும் என Yahya Sare'e ட்விட்டரில் பதவிட்டுள்ளார்.
எனினும், இச்சம்பவம் குறித்து தற்போது வரை அமெரிக்க தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாவில்லை.