அந்த பயம்... ஒன்றரை மடங்கு அதிக தூரம் பயணித்த அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர்க்கப்பல்
வளைகுடாவிற்கு புறப்பட்ட அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றான USS George HW Bush ஹவுதிகளின் தாக்குதலுக்கு பயந்து ஒன்றரை மடங்கு அதிக தூரம் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பாக இல்லை
அணுசக்தியால் இயங்கும் இந்த விமானம் தாங்கி கப்பல், ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையைச் சுற்றிச் செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் நமீபியாவின் கடற்கரைக்கு அப்பால் காணப்பட்டது.

அங்கு அது நன்னம்பிக்கை முனை வழியாக அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைய உள்ளது. இந்த விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
அங்கு அது, பிப்ரவரி மாதம் முதல் அப்பகுதியில் இயங்கி வரும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலுடன் இணையும். அமெரிக்கக் கடற்படையின் கிழக்குக் கடற்கரை விமானந்தாங்கி கப்பல்கள் பொதுவாக மத்திய கிழக்குக்குச் செல்லும் வழக்கமான வழித்தடமானது, ஜிப்ரால்டர் நீரிணை வழியாக மத்திய தரைக்கடலுக்குள் நுழைந்து, பின்னர் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலை அடைவதாகும்.
சுமார் 5,000 மாலுமிகள் மற்றும் விமானம் தாங்கி கப்பல் விமானப் பிரிவு ஏழைச் சேர்ந்த விமானிகளுடன் புறப்பட்டுள்ள USS George HW Bush கப்பல் ஏன் ஒன்றரை மடங்கு அதிக தூரம் பயணிக்கிறது என்பது குறித்து பென்டகன் அதிகாரிகள் விளக்கமேதும் தெரிவிக்கவில்லை.
ஆனால், ஈரானை ஆதரிக்கும் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கடலில், தனது மிகவும் சக்திவாய்ந்த கடற்படை கூட இனி பாதுகாப்பாக இல்லை என்பதை அமெரிக்கா மௌனமாக ஒப்புக்கொள்வதாகவே இச்சம்பவத்தை குறிப்பிடுகின்றனர்.

தங்கள் கட்டுப்பாட்டில்
உலக நாடுகளின் கவனம் மொத்தம் ஹார்முஸ் நீரிணையில் இருக்க, ஈரானுக்கு ஆதரவாக யேமனைச் சேர்ந்த ஹவுதிகள், பாப் அல்-மண்டேப் பகுதியை முடக்கிவிடுவோம் என அச்சுறுத்தி போரில் நுழைந்தனர்.
வலுவான ஆயுத பலத்துடன் இருக்கும் ஹவுதிகள் ஈரானுக்காக இஸ்ரேல் மீது கடுமையானத் தாக்குதல்களையும் முன்னெடுத்தனர். இந்தக் குழு, செங்கடல் துறைமுக நகரமான ஹொடைடா உட்பட யேமனின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன்,
அந்த நீர்நிலையை நோக்கியுள்ள மலைப்பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது. மேலும், செங்கடலில் உள்ள வணிகக் கப்பல்களைக் குறிவைத்து, பாப் அல்-மண்டேப் நீரிணையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.

தற்போது Bush கப்பல் Norfolk-லிருந்து செங்கடல் வழியாக அரபிக்கடலை அடையும் வழக்கமானப் பாதையைத் தெரிவு செய்திருந்தால், அந்தத் தொலைவு 8,000 முதல் 9,000 கடல் மைல்களுக்கு இடைப்பட்டதாக இருந்திருக்கும்.
ஆனால் ஹவுதிகளுக்கு பயந்து, ஆப்பிரிக்கக் கடல் பகுதிகளிலிருந்து தற்போது மேற்கொள்ளப்படும் மாற்றுப் பாதையின் காரணமாக, இப்பயணத் தொலைவு 13,000 முதல் 15,000 கடல் மைல்கள் வரை அதிகரிக்கும்; இது ஏறத்தாழ 1.5 மடங்கு அதிக தூரமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |