சவுதியின் மன்னர் காலித் இராணுவ தளம் மீது தாக்குதல்!
சவுதியில் மன்னர் காலித் இராணுவ விமானம் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
தெற்கு சவுதியில் உள்ள Khamis Mushait-ல் உள்ள மன்னர் காலித் இராணுவ விமான தளம் மீது ட்ரோன் மூலம் தாக்கியதாக ஹவுத்தி தெரிவித்துள்ளது.
சவுதி தரப்பில் மன்னர் காலித் இராணுவ தளம் மீதான தாக்குதல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த சில மாதங்களாக சவுதி மீதான தாக்குதலை ஹவுத்தி போராளிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் பல தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டாலும், சில ஏவுகணைகள் நாட்டின் தெற்கு பகுதியில் தாக்கியது.
ஜனாதிபதி Abdrabuh Mansour Hadi தலைமையிலான அரசாங்கப் படைகளுக்கும், ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் ஆயுத மோதலில் ஏமன் போராடி வருகிறது.
சவுதி தலைமையிலான கூட்டுப்படை 2015-ல் ஹவுத்திகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை ஆரம்பித்த பின்னர் நிலைமை மேலும் சிக்கலானது, இதன் விளைவாக மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டது.
இதனால், சவுதி மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவுவதன் மூலம் ஹவுத்திகள் பெரும்பாலும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.