இந்தியா நோக்கி வந்த கேலக்சி லீடர் கப்பல் கடத்தல்..!வீடியோ வெளியிட்டு இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை
பாலஸ்தீனத்தின் காசா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை கடத்தியுள்ளனர்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான தீவிர போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இஸ்ரேலியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 52 பேர் பயணம் செய்த கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை தெற்கு செங்கடல் பகுதியில் கடத்தியுள்ளனர்.
Yemen's Houthis have released footage of hijacking of the 'Galaxy Leader' cargo ship in the southern Red Sea.#Hijacking #GalaxyLeader #Houthis #Hamas #Israelpic.twitter.com/sQXlqgYKSG
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) November 20, 2023
ஹெலிகாப்டர் மூலம் கப்பல் மேல் தளத்திற்கு வந்த இறங்கிய ஹவதி கிளர்ச்சியாளர்கள் படை, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன் கப்பலை கைப்பற்றியது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.
துருக்கியில் இந்தியா நோக்கி சென்று கொண்டு இருந்த போது கேலக்ஸ் லீடர் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹவுதி படையினரின் செயலுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் எங்கள் இலக்கு
இந்நிலையில் இஸ்ரேலிய கப்பல்கள் எங்களது நியாயமான இலக்கு என்று ஹவதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இஸ்ரேல் தொடர்பான கப்பல்கள் எங்கிருந்தாலும், அதன் மீது எங்கள் நடவடிக்கையை எடுக்க தயங்க மாட்டோம் என ஹவதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |