சீனாவின் உதவியுடன்... ஹவுதிகள் சொந்தமாக தயாரிக்கும் மேம்பட்ட ஏவுகணைகள்
Houthis have started producing their own advanced missiles: ஹவுதிகள் தங்களின் சொந்த மேம்பட்ட ஏவுகணைகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏமனின் ஹவுதிகள் சீன உதிரிபாகங்களைப் பயன்படுத்தித் தாங்களே மேம்பட்ட ஏவுகணைகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தாக்குதல் எல்லைக்குள்
ஹவுதிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள், எங்கிருந்து விநியோகிக்கப்படுகிறது உள்ளிட்டத் தகவல்களை வெளியிட்டுவரும் அமைப்பு ஒன்று,
ஈரானின் 'கைபர் ஷேகன்' (Kheibar Shekan) ஏவுகணையின் ஒரு வகையைத் தயாரிப்பதற்காக, சீன விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து பல்வேறு உதிரிபாகங்களை ஹவுதிகள் வரவழைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது வடிவமைப்பில் இருக்கும் அந்த ஏவுகணையானது 1200 மைல்கள் தொலைவிலான இலக்குகளைக் குறிவைக்கப் பயன்படுத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஹவுதிகளின் தாக்குதல் எல்லைக்குள் சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் வந்துவிடும் என்றே அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வசந்த காலத்தில் அமெரிக்காவுடனான போரின்போது, அமெரிக்கத் தளங்களுக்கு எதிராக ஈரான் 'கைபர் ஷேகன்' ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈரான் உருவாக்கியுள்ள கைபர் ஷேகன் ஏவுகணை மலிவானது, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது மற்றும் மிகவும் துல்லியமானவை என்று அறியப்படுகின்றன.
கைபர் ஷேகன் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளிலிருந்து விலகிச் செல்லும் வகையில் தந்திரமாகச் செயல்படக்கூடியவை என்பதால், பிற ஈரானிய ஆயுதங்களை விட இவை அதிக செயல்திறன் கொண்டவை என்று அறியப்படுகின்றன.

கடந்த ஆண்டு சீன ஏவுகணை உபகரணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சரக்குகளைக் கைப்பற்றிய யேமன் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
ஹவுதிகளின் ஆயுதத் தயாரிப்பு நிலையங்கள் நன்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உற்பத்திச் செயல்முறை எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
சீன நிறுவனங்கள்
ஹவுதிகள் நீண்டகாலமாகவே பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்கள் சீனா மற்றும் பிற விநியோகஸ்தர்களுடன் ஆழமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.
ஐ.நா. மற்றும் ஆயுத நிபுணர்கள் சேகரித்த தரவுகளின்படி, ஹவுதிகளுக்குச் செல்லும் பொருட்களின் மிகப்பெரிய ஆதாரமாக தற்போது சீன நிறுவனங்கள் உள்ளன.

ஹவுதிகளுக்கு ட்ரோன் உதிரிபாகங்களை வழங்கும், அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளான விநியோகஸ்தர்களில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், இந்த விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. நேற்று இரவு, ஹவுதிகள் சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான 'அராம்கோ' (Aramco) எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தைத் தாக்கினர்; இதில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் பிற உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் சேதமடைந்தன.