செங்கடல் தாக்குதல்... காரணம் நாங்களே: பொறுப்பேற்ற ஹவுதிகள்
செங்கடலில் Eternity C என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது நாங்களே என ஹவுதிகள் பொறுப்பேற்றுள்ளனர். Magic Seas என்ற மற்றொரு கப்பல் கடலில் மூழ்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு கப்பல்கள்
புதன்கிழமை செங்கடலில் இருந்து ஆறு ஊழியர்களை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டனர், அத்துடன் 15 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
🚨⚡️The first footage of the bombing and sinking of the ship Magic Seas in the Red Sea by Yemen's Ansar Allah.
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) July 8, 2025
-: The scenes are insane in every sense of the word 🤯🔥pic.twitter.com/dalqL61A1e
பல மாதங்களாக அமைதி நிலவிய நிலையில், ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் சமீபத்திய நாட்களில் நடத்திய தாக்குதல்களில் இரண்டு கப்பல்கள் மூழ்கியுள்ளன.
Eternity C சரக்குக் கப்பலில் இருந்த 25 பேர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியுள்ள ஊழியர்களில் 6 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஹவுதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, மூழ்கும் கப்பலில் அந்த 6 பேர்களும் 24 மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளனர்.
ஏமன் கடற்படை கப்பலானது Eternity C சரக்குக் கப்பலின் ஊழியர்களில் பலரை மீட்டு, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உதவியது.
அமெரிக்க ஆதரவு இஸ்ரேல்
ஞாயிற்றுக்கிழமை Magic Seas என்ற மற்றொரு கப்பலை குறிவைத்து இதேபோன்ற தாக்குதலை முன்னெடுத்ததாக ஹவுதிகள் பொறுப்பேற்றனர். ஆனால் Magic Seas கப்பல் மூழ்கும் முன்னர் அதிலிருந்த ஊழியர்கள் மொத்தம் காப்பாற்றப்பட்டனர்.
செங்கடலில் கடந்த 2023 நவம்பர் முதல் 2024 டிசம்பர் வரையில் ஹவுதிகளால் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் இராணுவத்தால் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தங்களின் இந்த நடவடிக்கை என்றும் ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.
தாக்கப்பட்ட இரண்டு கப்பல்களும் லைபீரியா கொடிகளுடன் பயணப்பட்டவை என்றும் அவை கிரேக்க நிறுவனங்களால் இயக்கப்படுபவை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |