இஸ்ரேலுக்கு நான்கு நாள் காலக்கெடு... ஏமனின் ஹவுதிகள் மிரட்டல்
காஸாவுக்கான உணவு, மருந்து மற்றும் உதவிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஏமனின் ஹவுதி போராளிகள் இஸ்ரேலுக்கு நான்கு நாள் காலக்கெடு விதித்துள்ளனர்.
இறுதி எச்சரிக்கை
இல்லையெனில் இஸ்ரேலுக்கு எதிரான கடற்படை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
ஜனவரி மாதம் காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் குறைந்த பின்னர், வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட இறுதி எச்சரிக்கையானது ஹவுதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து தாக்குதல் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுதிகளின் தற்போதைய தலைவர் அப்தெல்-மாலிக் அல்-ஹவுதி வெளியிட்டுள்ள காணொளி அறிக்கை ஒன்றில், முழு உலகிற்கும் நாங்கள் அறிவிக்கிறோம்: நான்கு நாள் காலக்கெடுவை நாங்கள் வழங்குகிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த காலக்கெடுவானது மத்தியஸ்தர்கள் தங்கள் முயற்சிகளைத் தொடர அனுமதிக்கும் என்றும் இந்த நான்கு நாட்களுக்குப் பிறகும், இஸ்ரேலிய எதிரி காஸாவிற்குள் உதவிகள் நுழைவதைத் தடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டால், கடவைகளை முழுமையாக மூடுவதைப் பேணினால்,
காஸாவிற்குள் உணவு மற்றும் மருந்து நுழைவதைத் தொடர்ந்து தடுத்து வருவதால், இஸ்ரேலிய எதிரிக்கு எதிரான எங்கள் கடற்படை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஹவுதிகளுக்கு பயந்து
காஸா மீதான இஸ்ரேலின் போருக்குப் பிறகு, ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதிகள், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் கப்பல்களை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தினர்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இஸ்ரேல் தொடர்பிலான கப்பல்களை குறிவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அந்தக் காலகட்டத்தில், ஹவுதிகள் இரண்டு கப்பல்களை மூழ்கடித்தனர், இன்னொன்றைக் கைப்பற்றினர், உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்த இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
ஹவுதிகளுக்கு பயந்து பல வணிக கப்பல் நிறுவனங்கள் தென்னாப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட மற்றும் செலவு மிகுந்த பயணங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அத்துடன், இஸ்ரேல் மீது டசின் கணக்கிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களையும் ஹவுதிகள் முன்னெடுத்தனர். இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |