பிரேமலதாவை பார்க்க செருப்பு இல்லாமல் காவி துணியுடன் வந்த விஜயகாந்த்.. திருமணம் நடந்தது எப்படி?
மறைந்த நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் திருமணம் நடந்தது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் நேற்று காலை காலமானார். நேற்று, விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்பிறகு மாலையில் கோயம்பேடு கொண்டு வரப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
திருமணம் குறித்த தகவல்
விஜயகாந்துக்கும், பிரேமலதாவுக்கும் ஜனவரி 31, 1990 அன்று திருமணம் நடந்து, தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னதாக பிரேமலதா அளித்திருந்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவது என்பதற்கு எங்கள் திருமணமே சான்று. விஜயகாந்தின் குடும்பத்தினர் மதுரையைச் சேர்ந்தவர்கள். நங்கள் வேலூரை சேர்ந்தவர்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் கிடையாது. என்னை பார்க்க வந்தவுடன் அப்பாவுக்கு அவரை பிடித்து விட்டது.
மகளை கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு தான் கொடுக்க வேண்டும் என நினைத்தார். அவர் மிகவும் எளிமையாக வந்தார். காலில் செருப்பு இல்லாமல் காவி துணி அணிந்து வந்தார். அவர் சபரிமலைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அதனால், அந்த வேடத்தில் வந்தார்.
பிரபலங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், என்னவாக இருக்கும் என்று என் பெற்றோருக்கு தெரியாது. ஆனால், அவரை ஏற்கனவே எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர்" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |