விஜயகாந்த் உடல்நிலை தற்போது எப்படி இருக்கு? அமைச்சர் கூறிய பதில் இது தான்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
விஜயகாந்த் உடல்நலம்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், பல வதந்திகள் வெளிவந்ததற்கு, விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விஜயகாந்த் தாமாகவே சுவாசிக்கிறார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டது.
சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டம்.., தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள், 30 ஆம்புலன்ஸ்கள்
அமைச்சர் கொடுத்த விளக்கம்
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியனிடம் விஜயகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், "விஜயகாந்திற்கு சிறுநீரகம் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், இருமலும் தொடர் மூச்சு திணறலும் அவருக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதால் தேவைப்படும் போது செயற்கை சுவாசமும், மீதி நேரங்களில் தாமாகவே சுவாசிக்கிறார். விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |