இந்தியாவில் எத்தனை பெண் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் தெரியுமா?
இந்தியாவில் எத்தனை பெண் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எத்தனை கோடீஸ்வரர்கள்?
இந்தியாவில் உள்ள 513 பெண் எம்.பி.க்கள் மற்றும் 512 எம்எல்ஏ.க்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏடிஆர் என்ற தேர்தல் உரிமைகள் அமைப்பு ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் மூலம் வெளியிடப்பட்ட தகவலில், "இந்திய மக்களவையில் உள்ள 75 பெண் எம்.பி.க்களில் 6 எம்பிக்களும், மாநிலங்களவையில் உள்ள 37 பெண் எம்.பி.க்களில் 3 எம்பிக்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 பெண் எம்எல்ஏ.க்களில் 8 எம்எல்ஏ.க்களும் கோடீஸ்வரிகள் ஆவர்.
அறிக்கையின்படி, கோவாவைச் சேர்ந்த 3 பெண் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களில் இரண்டு (67 சதவீதம்), தெலுங்கானாவைச் சேர்ந்த 12 பெண் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களில் 8 (67 சதவீதம்), ஆந்திராவைச் சேர்ந்த 24 பெண் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களில் 14 (58 சதவீதம்), பஞ்சாப்பைச் சேர்ந்த 14 பெண் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களில் 7 (50 சதவீதம்), கேரளாவைச் சேர்ந்த 14 பெண் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களில் 7 (50 சதவீதம்) மற்றும் பீகாரைச் சேர்ந்த 35 பெண் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களில் 15 (43 சதவீதம்) பேர் தங்கள் சுய பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மொத்தம் 78 பெண் எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளும் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |