மணிக்கு எத்தனை கிமீ வேகத்தில் பூமி சுழல்கிறது தெரியுமா? வியப்பான தகவல்
பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகும் என்ற நிலையில் எவ்வளவு வேகத்தில் சுழல்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
பூமி சுழலும் வேகம்
விண்வெளியில் இருக்கும் அனைத்து கோள்களிலும் உயிரினங்கள் வாழும் ஒரே கோள் பூமி தான். பூமியை பற்றிய பல தகவல்கள் நமக்கு தெரிந்திருக்கும். அறிவியல் ரீதியாக பல விடயங்களை கண்டுபிடித்தாலும் சில மர்மமான விடயங்களும் இன்னும் உள்ளன.
உருண்டை வடிவில் இருக்கும் பூமி சுழன்று கொண்டே இருக்கிறது. மேலும், அது தன்னை தானே சுற்றுவது மட்டுமல்லாமல் சூரியனையும் சுற்றி வருகிறது.
இதில் பூமி தன்னை தானே சுற்றி கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன் காரணமாக தான் பகல், இரவு என்று மாறி மாறி வருகிறது.
ஆனால், பூமி வேகமாக சுற்றிக் கொண்டே இருக்கும்போது நாம் மேலிருந்து கீழே குதித்தால் வேறு இடத்தில் போய் விழுவதில்லை. அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?
பூமி சுழல்வதற்கு 24 மணிநேரம் ஆகிறது என்றால் சுழலும் வேகம் மணிக்கு 1,600 கி.மீ ஆகும். Physics Stack Exchange என்னும் வலைதளத்தில் பயனர் ஒருவர் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது, இவ்வளவு வேகத்தில் பூமி சுழன்றால், மேலிருந்து குதிக்கும் போது நாம் ஏன் வேறொரு இடத்தில் விழுவதில்லை என்று கேட்டுள்ளார்.
அதில் ஒருவர் கூறிய பதில் என்னவென்றால், "பூமி மணிக்கு 1,600 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றாலும், நாமும் அதோடு சுத்தி கொண்டிருக்கிறோம்.
இதனால் பூமி சுற்றும் வேகம் நமக்கு தெரியவில்லை. இந்த காரணத்தினால் தான் நாம் விழும்போது அதே இடத்தில் விழுகிறோம்" என்றார்.
நியூட்டனின் இயக்க விதி படி, ஒரு பொருளின் மேல் எந்த ஒரு புற விசையும் இல்லையென்றால், அந்தப் பொருள் அதோட இயக்க நிலையிலேயே இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |