நாசா விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தன்னுடைய உயிரை பணயம் வைத்து நாசாவில் வேலை பார்க்கும் விண்வெளி வீரர்களின் சம்பள விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறு வயதில் இருந்தே பலருக்கும் விண்வெளியில் வேலை பார்க்க வேண்டும் என்றும், விஞ்ஞானியாக வேண்டும் என்றும் கனவுகள் இருக்கும். அதிலும், முதல்முறையாக நிலவில் கால் பதித்தது முதல் பல்வேறு விண்வெளி ரகசியங்களை உலகத்திற்கு கொண்டு வந்தது வரை நாசாவின் பங்களிப்பு உள்ளது.
அந்தவகையில், உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக இருக்கும் நாசாவில் (NASA) பணிபுரிய வேண்டும் என்று பலரது ஆசையாக இருக்கும்.
இந்திய வீரர்களான கல்பனா சாவ்லாவில் ஆரம்பித்து சுனிதா வில்லியம்ஸ் வரை நாசாவில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான வேலைகளையும் செய்து வருகின்றனர்.
6 மாத கர்ப்பத்தில் ஓட்டப்பந்தயத்தில் ஓடியவர்.., ரூ.500 கோடி லாபம் கொடுக்கும் பிராண்டை உருவாக்கியது எப்படி?
சம்பளம் எவ்வளவு?
இந்த மாதிரியான கடின வேலைகளை செய்யும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்பதை தெரிந்து கொள்ளாலாம்.
நாசா அமைப்பின் இணையத்தில் உள்ள 2024 -ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 1.27 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
அதாவது மாத சம்பளமாக சுமார் 10 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த சம்பளமானது ரேங்க் படிநிலையை பொறுத்து வேறுபடும்.
மேலும், இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கு மாதம் சம்பளம் ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |