மனித உடலில் இருந்து நுழம்பு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சுகிறது தெரியுமா?
தற்போது நாடு முழுவதும் மழை பெய்து வருவதால், நுழம்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நுழம்பு எப்போது வருகிறது எப்போது கடிக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கும்.
நுழம்புகள் கடிப்பது ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் தீங்கு ஒவ்வொருவருக்கும் மாறுப்பட்டதாகும்.
பொதுவாகவே கோடைக்காலத்தில் நுழம்புகள் குறைவாகவே காணப்படும். தற்போது மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நுழம்பின் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளது.
நுழம்புகள் எப்போது மனித இரத்தம் மற்றும் விலங்குகளின் இரத்தத்தை குடித்தே உயிர் வாழ்கின்றன.
அந்தவகையில் இந்த பதிவில் மனித உடலில் இருந்து நுழம்பு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சுகிறது என்று பார்க்கலாம்.
மனித உடலில் இருந்து எவ்வளவு இரத்தம் உறியப்படும்?
ஒரு நுழம்பு கடித்தால், அது பொதுவாக 0.001 முதல் 0.01 மில்லி லிட்டர் வரை இருக்கும் ஒரு சிறிய அளவு இரத்தத்தை மட்டுமே உட்கொள்கிறது.
நுழம்புகள் யாரையும் கடிக்காமலும் வாழலாம். ஆனால் பெண் நுழம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு இரத்தம் அவசியம்.
முட்டையிடுவதற்கும், முட்டைகளை உரமாக்குவதற்கும் இரத்தம் தேவைப்படுகிறது. அதனால்தான் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சுகிறது.
அந்தவகையில் பார்த்தால், மனிதர்களை கடிப்பது பெண் நுழம்புகள் மாத்திரமே.
பொதுவாக, சிறிய அளவிலான இரத்தத்தை எடுத்துக்கொள்வது ஹோஸ்டுக்கு தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் கடிக்கும் போது செலுத்தப்படும் நுழம்பின் உமிழ்நீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |