ஈரான் மீதான போர் - ஒரு நாளைக்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?
ஈரான் மீதான ஆபரேஷன் எபிக் ப்யூரிக்கு அமெரிக்கா நாளொன்றுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளது என்பது குறித்து காணலாம்.
ஆபரேஷன் எபிக் ப்யூரி ஈரான்
அணுசக்தி திட்டத்தை கைவிட மறுப்பதாக கூறி, கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் வருகிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பாதுகாப்பு துறை ஆபரேஷன் எபிக் ப்யூரி(Operation Epic Fury) என பெயரிட்டுள்ளது.
இந்த தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இனிமேல் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என கூறியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போர் இன்னும் 4 வார காலத்திற்கு கூட நீடிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான ராணுவ உதவி
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்கு 21.7 பில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு 9.65 பில்லியன் டொலர் முதல் 12.07 பில்லியன் டொலர் வரை வரிசெலுத்துவோர் நிதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது மோதலுடன் தொடர்புடைய மொத்த அமெரிக்க செலவினம், 31.35 பில்லியன் டொலர் முதல் 33.77 பில்லியன் டொலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
போருக்கான செலவு
CENTCOM இன் படி, ஆபரேஷன் எபிக் ப்யூரி ராணுவ நடவடிக்கைக்கு வான், கடல், நிலம் மற்றும் ஏவுகணை பாதுகாப்புப் படைகளில் 20க்கும் மேற்பட்ட ஆயுத அமைப்புகளை ஈடுபடுத்தியுள்ளது.
இந்த நவடிக்கையில் பல்வேறு வகை போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இதில், குவைத்தில் தவறுதலாக அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

மேலும், டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகள், பல்வேறு வகையான ட்ரோன்கள், பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் THAAD ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான USS ஜெரால்ட் ஆர் ஃபோர்டு மற்றும் USS ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான 2 கேரியர் தாக்குதல் குழுக்கள் மத்திய கிழக்கு கடலில் சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

எபிக் ப்யூரி ராணுவ நடவடிக்கையின் முதல் 24 மணி நேரத்தில் அமெரிக்கா சுமார் 779 மில்லியன் டொலர் செலவிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2026 அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டில் 0.1 சதவீதம் ஆகும்.
இரு பாரிய போர்க் கப்பல்களையும் இயக்குவதற்கான செலவு மட்டும் ஒரு நாளைக்கு 15 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விமானங்களை மறு நிலைப்படுத்துதல், 10க்கும் அதிகமான கடற்படைக் கப்பல்களை நிறுத்துதல் மற்றும் பிராந்திய சொத்துக்களை அணிதிரட்டுதல் உள்ளிட்ட தாக்குதலுக்கு முந்தைய இராணுவக் கட்டமைப்புக்கு கூடுதலாக 630 மில்லியன் டொலர் செலவாகியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுக்குள் 1,000க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் தீவிரமடையும் போது செலவினங்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |