உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு சைஃப் அலிகான் கொடுத்த தொகை எவ்வளவு?
மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜன16ஆம் திகதி நள்ளிரவில் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றார்.
கொள்ளையன் வந்ததை பார்த்த வீட்டு பணியாளர்கள் அவரை தடுக்க முயன்ற போது அங்கு வந்த சைஃப் அலிகானையும் அந்த நபர் 6 முறை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
காயமடைந்த அவரை உடனே மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரை தாக்கிய நபரை அடையாளம் கண்டு பொலிஸார் 30 மணிநேரத்தில் கைது செய்தனர்.
அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்த ஷரிஃபுல் இஸ்லாம் ஷேஷாத். மேலும், அவர் வங்கதேசத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோதே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
காயமடைந்த 5 நாள்களிலேயே, அதாவது நேற்று சைஃப் அலி கான் வீடு திரும்பினார்.
இந்நிலையில், சைஃப் அலி கான் இன்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று சைஃப் அலி கானை சந்தித்த பின் பஜன் சிங் ராணா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர் "அவர் என்னிடம் சொன்னார், நீங்கள் என்னை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றீர்கள். மேலும் எனக்கு நன்றி தெரிவித்தார்" என்றார்.
மேலும், சைஃப் அலி கான் கொடுத்த நிதி உதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் "நான் எதையும் அவரிடம் எதிர்பார்க்கவில்லை, அவர் எனக்குக் கொடுத்ததை நான் பெற்றுக்கொண்டேன்.
அந்தவகையில், சைஃப் அலி கான், ஆட்டோ ஓட்டுநருக்கு பஜன் சிங் ராணாவுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |