ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எவ்வளவு செலவாகும்?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், ஒலிம்பிக் தொடர் நடத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2020ல் நடந்து முடிந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக 2021 ஜூலை மாதம் 23ம் திகதி துவங்க உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முன்னெடுக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக இறுதி நிமிடத்திலும் ரத்து செய்யப்படலாம் என்ற கருத்தும் உலவுகின்றது.
டோக்கியோவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ளவர்களில் சுமார் 80 பேர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதும், ஒருங்கிணைப்பாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், பொதுவாக ஒரு ஒலிம்பிக் தொடரை முன்னெடுக்க எவ்வளவு தொகை செலவாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவை இரண்டாக அடையாளப்படுத்துகின்றனர். ஒன்று உள்கட்டமைப்புக்கான செலவு, இன்னொன்று போட்டிகள் நடத்துவதற்கான செலவு.
உள்கட்டமைப்புக்கான செலவை பெரும்பாலும், ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கும் நாடுகளே ஏற்கின்றன. போட்டிகள் நடத்துவதற்கான செலவில், துவக்க விழா மற்றும் தொடர்புடைய நிகழ்ச்சிகள், சுகாதாரம் தொடர்பான செலவுகள், பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய செலவுகள் இதில் இடம்பெறுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பில் 2019ல் கூடிய நிர்வாகிகள் மொத்தம் 12.6 பில்லியன் டொலர் செலவாகும் என கணித்திருந்தனர். ஆனால் ஜப்பானின் முதன்மை நிர்வாகிகள் குழு ஒன்று மறு ஆய்வு மேற்கொண்ட பின்னர், மொத்த செலவு 22 பில்லியன் டொலர் என கணித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, 2016ல் முன்னெடுக்கப்பட்ட Rio de Janeiro ஒலிம்பிக் போட்டிகளுக்கான மொத்த செலவு 13.1 பில்லியன் டொலர் எனவும்,
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான மொத்த செலவு 10.4 பில்லியன் டொலர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.