ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த ஒலிம்பிக் தொடர் நாளை ஆரம்பமாகவிருக்கிறது.
உலகளாவிய நிகழ்வு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்சின் தலைநகரில் (பாரிஸ்) நடைபெறவுள்ளது.
ரூ.1255 கோடியில் தனியார் ஜெட், 500 கோடி வீடு, 3 கோடிக்கு Hand bag; அம்பானி திருமணத்தில் கவனம் ஈர்த்த இந்த பெண் யார்?
இறுதியாக பிரான்ஸ் நாட்டில் 1924 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது.
அதையடுத்து 100 ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.
பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் யாருக்கும் ஒலிம்பிக் கமிட்டி பரிசுத் தொகை வழங்குவதில்லை.
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும், முதல் எட்டு வீரர்களுக்கு பட்டயங்களும் மட்டுமே வழங்கப்படுகின்றன.
ஆனால் வெற்றபெற்றவர்களுடைய நாடு அவர்களுக்கு பரிசுத்தொகையை வழங்கும். அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
அமெரிக்கா
- தங்கம் வென்றவர்களுக்கு 37,000 டாலர்கள்
- வெள்ளி வென்றவர்களுக்கு 22,500 டாலர்கள்
- வெண்கலம் வென்றவர்களுக்கு15,000 டாலர்கள்
மல்யுத்தப் போட்டிகளில் தங்கம் வென்றால், அமெரிக்க ரெஸ்ட்லீன் லிவிங் தி ட்ரீம் மெடல் ஃபண்ட் என்ற அமைப்பின் மூலம் 2,50,000 டாலர்கள் வழங்கப்படுகின்றன.
நீச்சல் போட்டியில் தங்கம் வென்றால், கூடுதலாக 75,000 டாலர்கள் வழங்கப்படுகின்றன.
ஹாங்காங்
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால், தரவரிசையின் அடிப்படையில் பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ஹாங்காங் விளையாட்டு நிறுவனம் 7,68,000 டாலர்களை ஒதுக்கியுள்ளது.
மலேசியா
மலேசியாவின் வீரர்கள் பதக்கம் வென்றால் ஒவ்வொருவருக்கும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார் பரிசாக வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தான் குடியரசு
தடகள வீரர் பதக்கம் வென்றால் அடுக்குமாடி குடியிருப்பும், தங்க பதக்கம் வென்றால் மூன்று அறைகள் கொண்ட வீடும், வெள்ளிப் பதக்கம் வென்றால் இரு அறைகள் கொண்ட வீடும், வெண்கலம் வென்றால் ஒரு அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்
- தங்கம் வென்றவர்களுக்கு 10,00,000 டாலர்கள்
- வெள்ளி வென்றவர்களுக்கு 3,72,000 டாலர்கள்
- வெண்கலம் வென்றவர்களுக்கு 1,86,000 டாலர்கள்
இந்தியா
தங்கம் வென்றால் ரூ.75 லட்சம், வெள்ளி வென்றால் ரூ.50 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா
விலையுயர்ந்த வெளிநாட்டு கார்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கவுரவ பட்டங்கள் மற்றும் வாழ்நாள் உதவித் தொகையுடன் 4 மில்லியன் ரூபிள் ஆகியவை அந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |