பிரதமர் மோடி மற்றும் டொனால்ட் டிரம்பின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சம்பளம் குறித்த தகவலை பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையைப் புதுப்பிப்பதற்காக தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய ஒரே ஜனாதிபதி தான் என்று அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பதவியில் இருந்தபோது தனது முதல் சம்பளம் வெள்ளை மாளிகை வரலாற்று சங்கத்தின் புனரமைப்புக்கு நேரடியாகச் சென்றதாகக் கூறியுள்ளார்.

புற்றுநோயிலிருந்து மீண்டு.., முதல் முயற்சியிலேயே 720க்கு 715 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வில் முதலிடம்
இந்நிலையில், உலக தலைவர்களின் சம்பளம் பற்றிய விவரங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ட்ரம்பின் சம்பளம்:
அமெரிக்க கூட்டாட்சி சட்டத்தின்படி, அமெரிக்க ஜனாதிபதியின் அடிப்படை சம்பளம் 400,000 அமெரிக்க டொலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,50,46,862 ஆகும். இதனுடன் 100,000 அமெரிக்க டொலர்கள் பயணத்திற்காகவும், 50,000 அமெரிக்க டொலர்கள் செலவுகளுக்காகவும் மற்றும் 19,000 அமெரிக்க டொலர்கள் பொழுதுபோக்குக்காகவும் வழங்கப்படும்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதிக்கு வெள்ளை மாளிகையில் வசிப்பது உள்ளிட்ட பிற சலுகைகளும் கிடைக்கின்றன.
மோடியின் சம்பளம்
இந்தியாவில் பிரதமரின் பிரதமரின் மாத சம்பளம் சுமார் ரூ.1.66 லட்சம் ஆகும். இதில் அடிப்படை சம்பளம் ரூ.50,000 ஆகும். இதனுடன் செலவுப் படியாக ரூ.3,000, நாடாளுமன்றப் படியாக ரூ.45,000 மற்றும் தினசரி படியாக ரூ.2,000 ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |