இணையம் முடக்கப்பட்டாலும் நடந்த நேபாள போராட்ட ஒருங்கிணைப்பு - போராட்ட குழு பயன்படுத்திய செயலி என்ன?
இணையம் முடக்கப்பட்ட போதிலும், நேபாள போராட்ட குழுவினர் எப்படி தகவல் பரிமாற்றம் செய்தனர் என்பதை பார்க்கலாம்.
நேபாள போராட்டம்
நேபாளத்தில் பதிவு செய்யப்படாத 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, Gen Z எனப்படும் இளம் தலைமுறையினர் போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டம் வன்முறையாக மாறி, அரசு கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன. இதில், 51 பேர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி மற்றும் பல அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
முன்னாள் நீதிபதி சுசிலா கார்க்கி, நேபாள அரசின் இடைக்கால பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
தற்போது நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, மார்ச் 5 அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை முடக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இணைய சேவை முடக்கப்பட்ட போதிலும் போராட்டங்கள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
போராட்ட குழுவினர் பயன்படுத்திய செயலி
Gen Z போராட்ட குழுவினர், பிட்-சாட் (Bitchat) என்ற செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர்.
ட்விட்டர்(தற்போதைய X) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்ஸி இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.
இணைய இணைப்பு தேவையில்லாமல், ப்ளூடூத் தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் இந்த செயலியை பயன்படுத்த, மொபைல் எண்ணோ, மின்னஞ்சலோ, கணக்கு தொடங்கவோ தேவை இல்லை.
இதில் பரிமாறப்படும் செய்திகள் end-to-end encryption செய்யப்பட்டு, பயனர்களின் சாதனங்களில் மட்டுமே தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றன.
இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அதே போல், டிஸ்கார்ட் (Discord) செயலியை பயன்படுத்தி, ஒரே சர்வர் மூலம் 1.45 லட்சம் பேர் இணைந்து தங்களின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து விதித்துள்ளனர்.
மேலும், சமூகஊடகங்கள் முடக்கப்பட்டபட்டதும், மக்கள் VPN உதவியை நாடியுள்ளனர். சுவிட்சர்லாந்து நிறுவனமான Proton VPN 3 நாட்களில், 6000% சதவீத பயனர்கள் கணக்கு தொடங்கியதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |