கிரிக்கெட் வீரர் இல்லை எனக்கூறி ரூ.58 லட்சம் சேமித்த சச்சின் - எப்படி தெரியுமா?
நான் கிரிக்கெட் வீரர் மட்டும் இல்லை எனக்கூறி சச்சின் ரூ.58 லட்சம் வரியை சேமித்துள்ளார்.
சச்சின்
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் அளவிற்கு கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

ஆனால், அவர் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த காலத்தில் நான் ஒரு கிரிக்கெட்டர் மட்டும் இல்லை எனக்கூறி ரூ.58 லட்சம் பணத்தை சேமித்துள்ளார்.
2001 - 2005 காலக்கட்டத்தில் பெப்சி, VISA, ESPN உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பிராண்டுகளின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
இதன் மூலம், ரூ.5.92 கோடி வருமானம் ஈட்டிய அவர், அதற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80RR கீழ் 30% வரிவிலக்கு கோரியுள்ளார். அதாவது, ரூ.1.77 கோடி வரி விலக்கு கேட்டுள்ளார்.
நான் நடிகர்
வருமான வரிச் சட்டம் பிரிவு 80RR கீழ், நடிகர்கள், எழுத்தாளர்கள், உள்ளிட்டோர் வெளிநாட்டு மூலத்தில் இருந்து பெரும் வருமானத்திற்கு வரிவிலக்கு பெற முடியும்.

ஆனால், நீங்கள் கிரிக்கெட் வீரர், உங்கள் தொழிலுக்கு சம்பந்தமில்லாத ஒன்றின் மூலம் பெறும் வருமானத்திற்கு வரிவிலக்கு வழங்க முடியாது என வருமான வரித்துறை மறுத்துள்ளது.
நான் மைதானத்தில் விளையாடும் போது கிரிக்கெட் வீரர், விளம்பரத்தில் நடிக்கும் போது நடிகர். நான் கிரிக்கெட்டர் மட்டும் இல்லை நடிகரும் தான். எனவே இந்த வருமானத்திற்கு 80RR பொருந்தும் என வாதம் செய்துள்ளார்.
ரூ.58 லட்சம் வரி சேமிப்பு
இந்த வாதத்தை ஏற்ற தீர்ப்பாயம், நடிகர் என்பது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லை. விளம்பரங்களில் நடிப்பதற்கும் திறமை தேவைப்படுகிறது. இது நடிப்பின் கீழ்தான் வரும். கிரிக்கெட் தொடர்புடையது இல்லை எனவே இந்த வரிவிலக்கு சச்சினுக்கு பொருந்தும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் சச்சின் கோரிய ரூ.1.77 கோடி வரி விலக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் ரூ.58 லட்சத்தை சேமித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        