பணி நீக்கம் குறித்து கவலைப்படுகிறீர்களா? உங்கள் அவசர நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது? 7 எளிய வழிகள்!
நம்மில் பலருக்கு வேலையில் இருந்து எப்போது நீக்கபடுவோம், எப்போது தொழிலில் வருமானம் குறையும் என்ற அச்சம் அடிக்கடி வருவது உண்டு.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு ஒரே வழி அவசர நிதி ஆதாரங்களை உருவாக்கி கொள்வது மட்டும் தான்.
இத்தகைய அவசர நிதி ஆதாரங்கள் நம்முடைய கடினமான காலக்கட்டங்களில் நம்முடைய மனநிம்மதியை பாதுகாக்கிறது.
எப்படி அவசர நிதி ஆதாரங்களை உருவாக்குவது?
சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சுலபமான வழிகளிலேயே இந்த அவசர நிதி ஆதாரங்களை உங்களால் உருவாக்கி விட முடியும்.
அடையக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்தல்
உங்கள் அவசர நிதி ஆதாரம் என்பது, 3 முதல் 6 மாதங்கள் வரையிலான உங்களின் அத்தியாவசிய தேவையை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக உங்கள் வீட்டு வாடகை, உணவுக்கான மளிகை செலவுகள் ஆகியவை.
உதாரணத்திற்கு உங்கள் மாத அத்தியாவசிய செலவு ரூ.30,000 எனில், உங்கள் அவசர கால நிதி ஆதாரம் ரூ.90,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கலாம்.
சிறிய தொடக்கம் நல்லது
உங்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியவில்லை என்று ஆரம்பத்திலேயே வருத்தமடைய வேண்டாம், சிறிய தொடக்கமே சிறந்ததாக அமையும்.
உதாரணமாக மாதம் ரூ.1000 என்ற நிரந்தர சேமிப்பு பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். இந்த சேமிப்பை வழக்கமான உங்களின் சேமிப்பில் இருந்து பிரித்து புதிய சேமிப்பு கணக்குகளில் வைத்துக் கொள்ளுங்கள் இது உங்களின் தேவையற்ற செலவை குறைக்க உதவும்.
தானியங்கி சேமிப்பு முறையை பயன்படுத்துங்கள்
ஒவ்வொரு மாதம் உங்கள் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை தானியங்கி முறையில் உங்கள் அவசர நிதி ஆதாரங்களுக்கு மாற்றி சேமிக்கும் செயல்முறையை அமைத்து கொள்ளுங்கள். இது உங்கள் சேமிப்பை நிச்சயம் வளர்ச்சியடைய செய்யும்.
உதாரணமாக மாதம் ரூ.1000 தானியங்கி சேமிப்பு முறையில் நீங்கள் சேமித்தால் ஆண்டின் இறுதியில் ரூ12,000 என்ற பெரிய தொகை உங்கள் கையில் இருக்கும்.
திடீர் பலன்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்
உங்களின் இதர வருமானங்கள், போனஸ்கள், வரி சலுகைகள் ஆகியவற்றை உங்கள் அவசர நிதி ஆதாரங்களில் சேமியுங்கள்.
உதாரணமாக உங்களுக்கு வரி சலுகையாக ரூ.50,000 திரும்ப செலுத்தப்படுகிறது என்றால், அவரை உங்கள் சேமிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் சேமிப்பை ஊக்கப்படுத்தும்.
சேமிப்பை அதிகரிக்கும் வழியை கண்டுபிடித்தல்
தேவையற்ற செலவுகள், ஹோட்டல்களில் அதிகமாக செலவிடுதல், தேவையற்ற பயன்களுக்கான மாத சந்தா ஆகியவற்றை நிறுத்தி அந்த தொகை உங்கள் சேமிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவசர காலங்களில் மட்டும் நிதியை பயன்படுத்துதல்
உங்கள் அவசர நிதி ஆதாரங்களை உண்மையில் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும், இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி விட்டால் உடனடியாக அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இத்தகைய சேமிப்புகள் உங்களின் வருமானம் தடைப்பட்ட காலத்திலும் உங்களுக்கான மனநிம்மதியை வழங்கும். மேலும் புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை உங்களுக்கு தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |