இந்த பெருமை எனக்கு தான்! சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய டிரம்ப்: எதற்காக தெரியுமா?
வெள்ளை மாளிகையின் புதுப்பிப்பு பணிகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சம்பளத்தை அளித்துள்ளார்.
சம்பளத்தை வழங்கிய டிரம்ப்
வெள்ளை மாளிகையின் புதுப்பிப்பு பணிகளுக்காக வெள்ளை மாளிகை வரலாற்று சங்கத்திடம் தனது சம்பளத்தை வழங்கி இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் Truth சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னுடைய சம்பளத்தை வழங்கிய முதல் அமெரிக்க ஜனாதிபதி(ஜார்ஜ் வாஷிங்டன் தவிர) என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். வெள்ளை மாளிகைக்கு புதுப்பிப்பு பணிகள் தேவைப்படுவதால், தன்னுடைய முதல் சம்பளத்தை வெள்ளை மாளிகை வரலாற்று சங்கத்திடம் வழங்கி இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை உருவாக்கப்பட்ட பிறகு, கூடுதல் புதுப்பிப்புகளும், அழகுப்படுத்தலும் தேவைப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் இவற்றிக்கு கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரவுகளின் அடிப்படையில், அமெரிக்க ஜனாதிபதியின் சம்பளம் சுமார் 400,000 அமெரிக்க டொலராகும், இதனுடன் பல்வேறு போக்குவரத்து செலவினங்களுக்கு 100000 அமெரிக்க டொலர் , கொடுப்பனவுகள் 50,000 அமெரிக்க டொலர் ஆகியவையும் உள்ளன.
டிரம்ப் முதல் ஜனாதிபதி அல்ல
வெள்ளை மாளிகையின் புதுப்பிப்பு பணிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்காக சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய முதல் ஜனாதிபதி டிரம்ப் என்பது முற்றிலும் தவறான கூற்றாகும்.
டிரம்பிற்கு முன்னதாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் வாஷிங்டன், ஜான் எஃப் கென்னடி மற்றும் ஹெர்பர்ட் ஹீவர் ஆகியோர் தங்களது சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
டிரம்பின் நன்கொடையை உறுதிப்படுத்திய சங்கம்
வெள்ளை மாளிகையின் புதுப்பிப்பு பணிகளுக்காக டிரம்ப் தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கி இருப்பதை வெள்ளை மாளிகை வரலாற்று சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் வெள்ளை மாளிகையில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடத்தை உருவாக்க மிகவும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் அதை பூர்த்தி செய்ய டிரம்ப் தீர்க்கமான முடிவு எடுத்துள்ளார் என வரலாற்று சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |