இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக எப்படி நுழையலாம்? சர்ச்சையில் சிக்கிய வங்கதேச யூடியூபர்
எந்தவொரு ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக எப்படி நுழையலாம் என்று வங்கதேச யூடியூபர் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வங்கதேச யூடியூபர்
வங்கதேச நாட்டில், DH Travelling Info என்ற Youtube சேனலை நடத்தும் யூடியூபர் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், வங்கதேச நாட்டின் இந்தியாவுக்கான எல்லையாக இருக்கும் சுனம்காங் மாவட்டத்தில் அவர் நின்று கொண்டிருக்கிறார். அப்போது, இந்தியாவுக்கு செல்லும் பாதையை காட்டுகிறார்.
மேலும், இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களையும் , இந்தியாவுக்குள் நுழையும் சுரங்கப் பாதையையும் காட்டுகிறார்.
அப்போது, இந்த வழியானது முன்பு பழங்குடி மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்றும், இதன் வழியாக இந்தியாவுக்கு செல்ல பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் தேவையில்லை என்றும் கூறுகிறார்.
வைரலாகும் இந்த வீடியோ பழைய வீடியோ என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 3 பேர் இந்த வீடியோவில் இருக்கின்றனர்.
அதில் ஒருவர், "இந்தியாவில் இருந்து மாடுகள் ஆற்றின் வழியாக வங்கதேசத்துக்கு கடத்தப்படும்" என்று கூறுகிறார்.
அதோடு, எந்தவொரு நாட்டுக்குள் நுழையும்போதும் சட்டவிரோதமாக நுழையக்கூடாது என்றும், வங்கதேசத்திற்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது என்றும் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |