உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கா?அதில் இருந்து நிரந்தரமாக விடுபடுவது எப்படி?
மலச்சிக்கல் பிரச்சனை ஆனது, நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும்.
மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது.
இதனால் ஆண்களை விட பெண்களே அதிகம் சிரமப்படுவார்கள்.
உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு 90 சதவீதம் உங்களால் தீர்வு காண முடியும்.
தற்போது மலச்சிக்கலில் இருந்து எப்படி எளிய முறையில் விடுபடலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
- ஒரு கப் சூடான தண்ணீரில் கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என எடுத்து வந்தால் உங்கள் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கல் இல்லாமல் இதை எடுத்துக் கொள்ளும் போது சரியான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- காபி குடலிலுள்ள தசைகளை இயக்கி மலத்தை ஈஸியாக தள்ளி விடும். எனவே இதை சரியான அளவில் தினசரி எடுத்து வந்தால் நல்லது.
- உலர்ந்த திராட்சை தினசரி கொஞ்சம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். மேலும் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
- இந்த பழங்களில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளன. இதனுடன் தயிர் போன்ற புரோபயோடிக் உணவுகளை சேர்த்துக் கொண்டு வந்தால் குடலியக்கம் நன்றாக இருக்கும். நார்ச்சத்து குடலில் ஏற்படும் பிரச்சினைகளை நீக்கி சீரண சக்தியை மேம்படுத்துகிறது.
- சென்னா மூலிகை மலமிளக்கியாக செயல்படுகிறது. இதிலுள்ள இயற்கை பொருட்கள் குடலியக்க செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
- புதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி மலம் வெளியேற ஈஸியாக்குகிறது. மேலும் பசியை தூண்டுதல், சீரண மண்டலத்தை வலுப்படுத்துதல், சீரண சக்தியை அதிகரித்தல்.
- டான்டெலியன் டீ இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது. எனவே தினமும் ஒரு கப் டான்டெலியன் டீ உங்கள் மலச்சிக்கல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.
- ஒரு டீ ஸ்பூன் கருப்பட்டியை எடுத்து சூடான நீரில் கலந்து படுக்கைக்கு போவதற்கு முன் குடிக்க வேண்டும். இது காலையில் எழுந்ததும் மலம் எளிதாக வெளியேற உதவும்.
- எள் விதைகளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய் குடலுக்கு போதுமான ஈரச்சத்தை கொடுத்து மலச்சிக்கலை தடுக்கிறது. இந்த எள் விதைகளை சாலட், செரல்ஸ் அல்லது உணவுகளில் சேர்த்து வந்தாலே போதும் பயன் பெறலாம்.
- 2 பச்சை ஆப்பிள்கள் 3 கிவி பழங்கள் கொஞ்சம் லெமன் ஜூஸ் பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கி பருகுங்கள். மலச்சிக்கலை துரத்தி விடலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.