வயதிற்கு ஏற்ப முகத்தில் முடி அதிகமாகிறதா? - நிபுணர்களின் கருத்து இது தான்!
பொதுவாக அனைவரும் வயதாகும்போது முடி உதிர்வை எதிர்கொள்கின்றனர். பல சந்தர்ப்பங்களில், வயதுக்கு ஏற்ப தேவையற்ற முடிகள் முகத்தில் வளர ஆரம்பிக்கும்.
அதில் பெரும்பாலும் பெண்களெ அவதிப்படுகின்றார்கள். அது ஏற்படுவது ஏன் என்று குறித்தும் அதற்கு நிபுணர்களும் விளக்கம் என்ன என்றும் தற்போது இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முகத்தில் முடி அதிகமாகிறதா?
ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடியை ஏற்படுத்துகின்றன.
நீங்கள் வளர வளர, முக முடிகள் கன்னத்திலும் உதடுகளைச் சுற்றியும் வளர ஆரம்பிக்கும். அது இயல்பானது.
முகத்தில் தேவையற்ற முடிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான்.
குறிப்பாக கருப்பையில் இருந்து ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதற்கு காரணமாகிறது.
என்ன செய்யலாம்?
தேவையற்ற முக முடியை நீக்குவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் மிக முக்கியமான வழிகளில் ஒன்றாக முதலில் இருப்பது, அடிப்படை காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுதான்.
தேன் மற்றும் சர்க்கரை
1 ஸ்பூன் தேனில் 2 ஸ்பூன் சர்க்கரையை கலந்து சூடுபடுத்திக் கொள்ளவும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி குளிர விடவும்.
குளிர்ந்ததும் முகத்தில் தடவி 20 நிமிடம் உலர விடவும்.
இது நன்கு உலர்ந்த பிறகு, ஒரு காட்டன் துணியை நீரில் நனைத்து, முகத்தை நன்கு அழுத்தி துடைக்கவும்.
இப்படி செய்தால் துணியோடு முகத்தில் உள்ள முடிகள் வந்து விடும்.
கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |