ஓடிப்போகும் அதிக எடை! ஓமத்தை இப்படி எடுத்து கொண்டாலே போதும்
பொதுவாக ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். ஓமம் விதைகள் மருத்துவத்திலும், உணவிலும் பயன்படுகிறது.
ஓமத்தை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது. ஓமத்தில் ‘தைமோல்’ என்னும் வேதிபொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது.
ஓமத்தில் கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபிளோவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இதுபலவகையான நோய்களை குணமாக்க உதவுகின்றது. குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
அந்தவகையில் ஓமம் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது? எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
எப்படி உதவுகின்றது?
ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டிருக்க தினமும் ஓம விதைகளைப் பயன்படுத்தி டீ அருந்தி வந்தால் உடல் எடைக் குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது
அதோடு அது செரிமானத்தை சீராக்கவும், மெட்டாபாலிசத்தை தூண்டவும் உதவுகிறது. அதோடு ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளதால் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
அரை ஸ்பூன் ஓம விதை மற்றும் 1 ஸ்பூன் சீரகம் என இரண்டையும் ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன் ஊற வைத்துவிடுங்கள்.
மறுநாள் காலை எழுந்து அதில் 1/2 துண்டு இஞ்சி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். பின் அதில் அரை பாதி எலுமிச்சை , மற்றும் புதினா இலைகளை சேர்த்து கலந்து குடிக்கலாம். சுவைக்கு கொஞ்சம் தேன் கலந்துகொள்ளுங்கள்.
எனவே தினமும் பால் டீ குடிப்பதை விட இந்த டீக்கு மாற்றம் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு
கோடைக்காலத்தில் அதிக அளவில் ஓமத்தை உட்கொண்டால், அது உங்கள் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும்.
விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பி, ஓமத்தை அதிக அளவில் உட்கொள்வது அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.