சருமம் பொலிவு பெற மஞ்சள் + தேங்காய் எண்ணெய்; எப்படி பயன்படுத்துவது தெரியுமா?
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தில் எந்தவொரு பருக்களும் ஏற்படாமல் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
சருமத்தை பளபளக்க செய்ய பலரும் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று பல்வேறு சிகிச்சையும் மேற்கொள்வார்கள்.
அதை செய்தும் பலருக்கு நினைத்த மாதிரி சருமம் கிடைப்பதில்லை. எனவே பல ஆண்டுகளுக்கு முன்னில் இருந்து நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த இயற்கை முறையை பயன்படுத்திபார்க்கலாம்.
அந்த வகையில் தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் வைத்து முகத்தை பளபளக்க செய்யலாம். இது கரும்புள்ளிகள், சிவத்தல் மற்றும் மந்தமான தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
மஞ்சள் - 1 தேக்கரண்டி
-
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயார் செய்துக்கொள்ளலாம்.
இந்த கலவையை சுத்தமான முகம் மட்டும் கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். இதை வாரத்திற்கு ஒன்று இல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்?
-
வயதான அறிகுறிகளை தாமதப்படும்.
- சருமம் ஈரப்பதமாக இருக்கும்.
-
முகப்பரு ஏற்படாமல் தடுக்கும்.
- சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.