தேன் + ரோஜா இதழ் போதும்..! கருமையான உதட்டை சிவப்பு நிறத்தில் மாற்றலாம்
உதடுகளின் கருமை என்பது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நபர்களால் எதிர்கொள்ளப்படும் பொதுவான பிரச்சினையாக தற்போது மாறியுள்ளது.
புகைபிடித்தல் முதல் தரம் குறைந்த அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு வரை உதடுகள் கருமையாகின்றன.
கருமையான உதடுகளுக்கு எதிராக பல தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன என்றாலும், நீங்கள் வீட்டு வைத்தியத்தை பயன்படுத்துவதை போன்று இருக்காது.
எனவே வீட்டில் எப்போதும் இருக்கக் கூடிய தேனும் ரோஜா இதழும் வைத்து எப்படி உதட்டை இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உதடு கருமைக்கான காரணங்கள்
நீரிழப்பு, புகைபிடித்தல், அதிகப்படியான காபின் உட்கொள்ளல், உதடுகளில் அதிகப்படியான பொருட்களைப் பயன்படுத்துதல், சூரிய ஒளியில் இருப்பது மற்றும் வைட்டமின் குறைபாடு போன்ற பல்வேறு காரணிகளால் இது ஏற்படுகிறது.
வீட்டு வைத்தியமாக என்ன செய்யலாம்?
தேவையான பொருட்கள்
- ரோஜா இதழ்கள்
- தேன்
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் ரோஜா இதழ்களை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடுத்து அதில் தேன் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் அதை உதட்டில் தடவி 2 முதல் 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
- பிறகு அப்படியே 5 நிமிடத்திற்கு உதட்டை அப்படியே விடவும்.
- பருத்தி மற்றும் தண்ணீரின் உதவியுடன் உதடுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- இதை நீங்கள் வாரத்திற்கு 3 முறை செய்தால் நல்ல பலனை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |