உக்ரைன் போரில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம்: பின்னணி ரகசியம் என்ன?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போர்க்களத்தில் பயன்படுத்தும் முக்கிய நடவடிக்கையை உக்ரைன் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
ரஷ்யாவுடன் விடாமல் மோதும் உக்ரைன்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்த்து உக்ரைனிய ராணுவம் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறது.
இந்த சண்டையில் உக்ரைன் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்கள வரிசையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இந்த தொழில்நுட்ப அறிவை உக்ரைன் தங்களுடைய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் பகிர்ந்து வருவதன் மூலம் உலக அரங்கில் உக்ரைன் புதிய சக்திவாய்ந்த மையமாக மாறிவருகிறது.
பின்னணி ரகசியம் என்ன?
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், ட்ரோன் பயன்பாடுகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தன்னுடைய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கென புதிய பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனிய ட்ரோன்களின் செயல்பாடுகள் குறித்த வீடியோக்கள் பகிரப்படுகிறது.
அந்த வகையில் போர் களத்தில் ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட 2 மில்லியன் மணி நேரத்திற்கும் அதிகமான(சுமார் 228 ஆண்டுகள் நீளமுள்ள) வீடியோ காட்சிகளை உக்ரைன் இந்த தளத்தில் பதிவேற்றியுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு 5TB வரையிலான வீடியோ காட்சிகள் இந்த தளத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது.
இந்த தரவுகளுக்கு மாற்றாக உக்ரைன் தங்களது நட்பு நாடுகளிடம் இருந்து தானியங்கி ஆயுத அமைப்புகள், நவீன மற்றும் அதிவேக AI தொழில்நுட்ப கருவிகளை உக்ரைன் பெற்று வருகிறது.
நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போர் நடவடிக்கையானது தற்போது தொழில்நுட்பத்தை விரைவாக பரிசோதிக்கும் களமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |