படகு விபத்தில் சிக்கிய நபர்... கொலைகார பிரன்ஹா மீன்கள் தின்ற நிலையில் சடலமாக மீட்பு
பிரேசில் நாட்டில் படகு விபத்தில் சிக்கிய ஒருவர், ஆபத்தான பிரன்ஹா மீன்கள் தின்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரன்ஹா மீன்களால் தாக்கப்பட்ட நிலையில்
பிரேசிலின் Cuiabá நதியில் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணிக்கு படகு விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 38 வயது ஜோனி ஜோஸ் சில்வா என்பவரது சடலம் அடுத்த நாள் பகல் மீட்கப்பட்டுள்ளது.
Picture: Jam Press
சம்பவத்தின் போது இரண்டு படகுகள் மோதியுள்ளது. இதில் ஒரு படகின் சாரதியான ஜோனி ஜோஸ் சில்வா உட்பட இருவர் அந்த நதியில் தவறி விழுந்து மாயமாகியுள்ளனர். மூன்று பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே ஜோனி ஜோஸ் சில்வாவின் சடலம் பிரன்ஹா மீன்களால் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் தப்பிய மூவரில் ஜோனி ஜோஸ் சில்வா என்பவரின் மனைவியும் ஒருவர் என்றே கூறப்படுகிறது.
ஆனால் வாக்னர் சில்வா என்ற இன்னொருவரின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை. தகவல் வெளியான நிலையில் பிரேசில் கடற்படை குழு ஒன்று சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.
30 வகையான பிரன்ஹா மீன்கள்
மேலும், படகு விபத்து நடந்த பகுதியானது அதிகாரிகளால் தடை செய்யப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து விபத்து தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
Picture: Jam Press
2021 நவம்பர் மாதம், தேனீக் கூட்டத்திலிருந்து தப்பிக்க நதியில் குதித்த ஒருவர், பிரன்ஹா மீனால் குதறப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த 30 வயது நபர் தமது நண்பர்கள் இருவருடன், மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தேனீக் கூட்டம் இவர்களை துரத்தியுள்ளது.
இதனையடுத்து மூவரும் அந்த நதியில் குதித்துள்ளனர். இதில் இருவர் தப்பித்துக்கொள்ள, ஒருவர் மட்டும் பிரன்ஹா மீன்களிடம் சிக்கியுள்ளார். தென் அமெரிக்க நதிகள் மற்றும் ஏரிகளில் சுமார் 30 வகையான பிரன்ஹா மீன்கள் காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |