தீக்கிரையான ரஷ்யாவின் மிகப்பெரிய வணிக வளாகம்! வெளியான காணொளி
ரஷ்யாவில் உள்ள கட்டி முடிக்கப்படாத மிகப்பெரிய வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுக்க தொடங்கிய நாள் முதல் ரஷ்யாவில் உள்ள பிரபல கட்டிடங்களில் அடுத்தடுத்து தீக்கிரையாகி வருகிறது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை ரஷ்யா அதிகாரிகள் எ்நதவித தகவலையும் வெளியடவில்லை.
இந்நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய டிஎம்-டவர் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
வணிக வளாக கட்டிடத்திலிருந்து கரும் புகை வெளியேற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.
வட கொரியா முழுவதும் ராணுவத்தை முடுக்கிவிட்ட அதிபர் கிம்! வெளியான புகைப்பட ஆதாரம்
கட்டிடத்தின் மேற்கூரையில் தீ ஏற்பட்டதாகவும், டிஎம்-டவரின் மேற்கூரையில் தீப்பிடிக்கக் கூடிய கட்டுமானப் பொருட்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
Yesterday in #Moscow, an unfinished business center Tower caught fire. pic.twitter.com/lmJlWVTIeC
— NEXTA (@nexta_tv) May 17, 2022
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, 30 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவியது.
உள்ளூர்வாசிகள் எரியும் கட்டிடத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.