50 ஆண்டுகளில் 73% வனவிலங்குகள் மக்கள் தொகை சரிவு: அறிக்கை கூறும் அதிர்ச்சிகரமான காரணம்!
மனித செயல்பாடுகள் காரணமாக உலக உயிர்களின் அளவு அபாயகரமான நிலையில் இருப்பதாக அறிக்கைகள் தகவல் எச்சரித்துள்ளன.
சரிவில் வனவிலங்குகள் எண்ணிக்கை
உலகில் உள்ள ஒவ்வொரு முனைகளிலும் அதிகரித்து வரும் மனித செயல்பாடுகள் காரணமாக உலக வனவிலங்குகளின் இழப்பு அதிகரித்து வருவதாக உலக இயற்கை நிதியம் (WWF) என்ற பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
வாழும் இயற்கை உலகின் இருப்புகளை பற்றி மிக விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் “தி லிவிங் பிளானட் அறிக்கையின்” (The Living Planet Report) ஆய்வில், கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 73% வாழும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் பறவை, பாலூட்டி, நீர் விலங்கு, ஊர்வன மற்றும் மீன் என 5000 வாழும் வனவிலங்குகள் இந்த கணக்கெடுப்பில் இருந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
மனித அச்சுறுத்தல்களின் விளைவு
சுரங்கங்கள், மாசுபாடு போன்ற மனித இடையூறு மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக அமேசான் காடுகளில் உள்ள ஆற்றில் வாழும் இளஞ்சிவப்பு டால்பின்கள் 60% அழிந்துவிட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் மனித இடையூறுகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக ஆமைகள், யானைகள் போன்ற உயிரினங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக உலக வனவிலங்கு இருப்பு குறித்த ஆய்வுகள் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில், எதிர்கால சந்ததியினருக்கு உலகின் உயிர் வளத்தை வழங்குவதற்கான பாதுகாப்பு நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும் என்று WWF அழைப்பு விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |